Description
மரக்காலையொன்றில் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருக்கும் அரிந்த தண்டுத் துண்டங்களின் குறுக்குவெட்டு முகத்தை உற்று நோக்கியதுண்டா? நீரலைகள் விரிந்தலைவது போலத் தெரியும் அழகழகான வளைகோடுகள் அதில் பதிந்திருக்குமே. காலத்தின் சாட்சியாகிப்போன ஆண்டுவளையங்களெனும் அக்கோட்டுச் சித்திரங்களைக் கண்டாலே, குறித்த அம்மரம் யாரிடமும் சொல்லாத தன் இளமைக் காலத்தின் பேரிரகசியங்களையெல்லாம் அதற்குள் புதைத்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும்.
அம்மரத்துண்டங்கள் சீவிச் செப்பனிடப்பட்டு வடிவமைக்கப்படும் அகன்ற கதவுகளுக்கருகில் சென்றாலுங்கூட ஆர்வமாய் அச்சித்திரவளையங்களைத் தொட்டுத் தடவிப் பார்ப்பேன். மிக அமைதியாய் தனித்திருக்கும் அக்கதவுகளோ தமக்குள் பதித்து வைத்திருக்கும் வாழ்நாளின் மகிழ்ச்சி, நிறைவு, ஏக்கம், தவிப்பு சோகங்களையெல்லாம் தன் விருட்ச மொழியில் மிக ரகசியமாய் என்னோடு மட்டும் உரையாடுவது போலவே எனக்குத் தோன்றும்.





Reviews
There are no reviews yet.