Description
13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக மகாகவியும் சூஃபி ஞானியும் ஆன மௌலானா ரூமி அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் இந்நூல் உங்களிடம் கொண்டு வருகிறது.
மௌலானா ரூமியின் கவிதைகளில் அன்பின் அனைத்துப் பரிமாணங்களும் வெளிப்பட்டுள்ளன. எனவே, சில நேரங்களில் அவரின் கவிதை மிகவும் எளிமையானதாகத் தென்படலாம். இளம் காதலன் ஒருவன் தன் காதலியிடம் பேசுவது போல் தெரியலாம். ஆனால் மனித காதல் என்பதும்கூட இறைக் காதலின் பிரதிபலிப்புதான் என்பதை மௌலானா ரூமி மீண்டும் மீண்டும் தனது காவியத்தில் உணர்த்துகிறார்கள். ஒவ்வொரு அன்பும் இறைவனிடமே இட்டுச் சென்றாக வேண்டும். ஏனெனில் அன்பின் மூல முகவரி இறைவன்தான். அதற்கான வழியை மௌலானா ரூமியின் கவிதைகள் நமக்குக் காட்டுகின்றன.

Reviews
There are no reviews yet.