Description
டாக்டர். கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் இந்திய உளவியலின் தந்தை என்று போற்றப்படுகிறவர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் 1932 இல் பிறந்தார். அவ்வூரிலிருந்து கல்லூரிக்குச் சென்று படித்த முதல் நபராக அவர் கருதப்பட்டார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் தத்துவத்திலும் உளவியலிலும் டாக்டர் பட்டம் பெற்றார். ஆன்மிக உளவியல் (பாராசைக்காலஜி) எனும் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அமெரிக்காவில் ஜே.பி. ரைன் என்ற அறிஞரிடம் ஆன்மிக உளவியல் கற்றார். 200 நூல்களும் 300 ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். அதில் ஒரு ஆய்வுக் கட்டுரை தான் தங்கள் கரங்களில் சிறு நூலாகத் தவழ்கிறது. ஆன்மிகத் தேடலில் அவர் கொண்ட ஆர்வமே முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஆய்வு செய்ய அவரைத் தூண்டி இருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை மேலோட்டமாகப் படிக்கிறவர்களால் இப்படி ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி விடமுடியாது. தான் கற்ற தத்துவம் மற்றும் உளவியலை அளவுகோளாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை பேராசிரியர் ராமகிருஷ்ண ராவ் ஆழ்ந்து வாசித்திருக்கிறார் என்பதற்கு இந்த ஆய்வுக் கட்டுரையே சாட்சியாக இருக்கிறது. ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட எல்லாத் தலைப்புகளிலும் நியாயம் செய்திருக்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எந்தக் கோணத்தில் அவர் ஆய்வு செய்கிறாரோ அதுபற்றி உலக அறிஞர்கள் கூறிய கூற்றுகளையே ஆதாரமாகக் கொண்டிருப்பது அவருடைய ஆய்வுக்கு மெருகூட்டுகிறது.

Reviews
There are no reviews yet.