ஆரண்ய வாசி

கறுப்பு நிறத்துக்கு இசைவான கடும்பச்சைப் பின்னணியில் ஒரு த�ொகை நந்தியாவட்டைப் பூக்கள் சற்றேனும் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தன; ஜன்னல் கம்பிகளினூடாக, இரவின் இருள் முற்றத்தை எட்டப்போகும் நேரத்தில். ஜன்னல் சட்டத்தினூடாகத் தென்பட்ட முற்றத்தைச் சூழவுள்ள மொத்த சூழலுமே கறுப்பு நிறத்துக்கு இசைவான கடும்பச்சைப் பின்னணியில் நெருக்கமாகப் பரந்திருந்த வெண்ணிற நந்தியாவட்டைப் பூக்களால் மூடப்பட்டிருந்தது அவளது விழிகளை வேறெதையும் பார்க்க விடாமல். சரியாக கண்மணியின் நடுவில் நந்தியாவட்டைப் பூக்கள் பூத்திருந்தன அவளது ஒரு விழியில் ஒன்றென. ஆறு மணி செய்தியறிக்கை முடிந்ததன் பிறகு ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டு ஜன்னலின் சதுரச் சட்டத்துக்கு நேராக அமர்ந்து கொண்ட அவள், வெண்ணிற நந்தியாவட்டைப் பூக்கள் கறுப்புப் பின்னணியிலிருந்து மறைந்து போனதன் பிறகுதான் விழிகளை அதிலிருந்தும் அகற்றினாள்.

FathimaBooks.com Commonfolks.in

Description

உயிரிழப்புக்களோடு வலியென்னன்னு உனக்குத் தெரியுமா? உன் காலத்துல, உன்னோட சந்தோசத்தை, துக்கத்தை பங்குபோட்டுக்கிட்டவங்க இப்ப மண்ணோடு மண்ணாய்க் கலந்திட்டாங்க. நீ ஜீவிச்சிட்ருக்கே. நீ அவங்க கூட மண்ணுக்குள்ளேயும் போகாம, மண்ணுக்கு வெளியேயும் நிக்க முடியாம தவிச்சிட்டுருக்கே. அது எவ்வளவு பெரிய வலி தெரியுமா? நீ எப்போவாவது ஒரு நாள் செத்துப் போய்த்தான் ஆகணும். ஆனா அதுவரைக்கும் உன்னோட பந்தங்கள் நீ செஞ்ச பாவங்கள் உன்னை செத்துப் போக விடாம தடுத்துட்டே இருக்கும். காட்டை ஒட்டியே வாழ்ந்துட்டு இருக்கிற இந்த ஊர்கள்ல எப்பவாவது யாராவது இதுவரைக்கும் இயற்கையாய் செத்துப் போய் இருக்காங்களா? வயசாகி முதிர்ந்து போய் தள்ளாடி தள்ளாடி சாவு வராதான்னு ஏங்கிக் கொண்டிருக்கிறவங்க ஒவ்வொரு வீட்டிலேயும் கூடிக் கொண்டே வாராங்க. இந்த காட்டு மண்ணுல பொறந்தவங்க எல்லோருமே காக்கைகளைப் போல மரத்தை வெட்டுறதைப் போல மனுஷ உசுரை கொல்றதும் பாவமான இந்த ஊர்ல இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்து சட்டுன்னு செத்துப் போறவங்க அதிர்ஷ்டசாலிங்க.

நூலிலிருந்து

Additional information

Book Type

Soft Cover

Category
Tags

Reviews

There are no reviews yet.

Add a review

Your email address will not be published. Required fields are marked *