அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில்/தீவுக்காலை வண்ணார் சமூக மக்களைப்பேசும் இந்நாவல் முழுக்க முழுக்க அம்மக்களுக்கேயுரிய பேச்சு மொழியிலேயே அமைந்திருக்கிறது. படித்தவுடன் சில சொற்கள் புரியாவிடினும் கதையின் ஓட்டத்தில் அவற்றின் பொருள் புரியும்படியாகவே அமைந்திருந்தமை சிறப்பு. கதையின் நாயகியாக வரும் பரஞ்சோதி ஒரு வண்ணார் சமூகப்பெண்ணாக இருக்கிறாள். அவளைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள இந்நாவலில் சமூகத்தின் விளிம்பு நிலை வண்ணார் சமூக மக்களை, அவர்களது வாழ்வியலை, உளவியற் துன்பங்களை, அச்சமூக பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை, சமூக அநீதியை எதிர்த்து நிற்க…