இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பில் காத்திரமான பதிப்பகமாக கஸல் தனது பணியைச் செய்யும் என எதிர்பார்க்கிறோம். பதிப்பகங்களினால் வாசகர்களுக்கு புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பதில் பல சிக்கல்கள் இருந்துவருகிறது. இலங்கையின் முக்கியமான நூல்கள் சில ஓரிடத்தில் தேங்கி இருப்பதை கண்டுள்ளோம்.
அத்துடன் புத்தகங்களை நியாயமான விலையிலும் தரமான முறையிலும் வெளியிடுவது பிரதானமாகும். அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கே அல்லல்படும் வேளையில் புத்தகங்கள் இலாப நோக்கில் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவது பொருளாதார ரீதியில் வாசகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனையும் ஓரளவு கஸல் நிவர்த்திக்கும் என நம்புகிறோம்.
புதிய படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக்கொடுப்பதற்கும் மீள் பதிப்புச் செய்ய வேண்டிய புத்தகங்களின் தேவை கருதி அதனையும் பதிப்புச் செய்யும் பணியை கஸல் ஆற்றும்.
வாசகர் நலன் முக்கியத்துவமிக்கது. கஸல் தொடர்பான மேலான ஆதரவையும் நல்லது கெட்டதுகளை சுட்டிக்காட்டி தட்டிக்கொடுக்கும் பணியை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம்.