Description
நமது சமூகங்களில் காலங்காலமாகக் கட்டமைத்துப் பாதுகாக்கப்பட்டு வரும் போலித்தனமான வெற்றுப் புனிதங்களைக் கட்டுடைக்கும் எழுத்தியக்கமாக சாத்திரியின் இந்தச் சிறுகதைத் தொகுதியினை அடையாளப்படுத்தலாம்.
– லறீனா அப்துல் ஹக்
எழுத்தாளர் சாத்திரியின் பத்துக் கதைகள் அடங்கிய ‘மீதெழல்’
சிறுகதைத் தொகுதி பல வகைகளிலும் முக்கியத்துவம் மிக்கது
எனக் கருதுகின்றேன். ஓர் ஆண் கதைசொல்லியின் தன்விபரிப்புக்
கதைப் பாணியில் அமைந்துள்ள இக்கதைக் களங்கள் ஈழம்,
தமிழகம், புலம்பெயர் தேசம் எனப் பன்முகமானவையாக
அமைந்துள்ளன. அங்குள்ள மக்களின் வாழ்வியல், கலாசாரம்,
பழக்க வழக்கங்கள், அகதி வாழ்வின் யதார்த்தநிலை
என்பனவற்றைப் போகிற போக்கில் பிரதிபலித்துச் செல்லும்
மிகவும் வித்தியாசமான கதைக் கருக்கள்.
இக்கதைகளின் சிறப்பம்சங்களில், சுய எள்ளலும் சுயவிமர்சனமும்
கொண்ட அலாதியான கதைமொழியைத் தலையாயது எனக்
குறிப்பிடலாம். உலக மொழிகளில் அமைந்துள்ள பல்வேறு
இலக்கியப் பிரதிகள் வாழ்வின் மிகக் கடினமான தருணங்களை,
மோசமான அனுபவங்களை ஊடறுக் கடந்து செல்வதற்கான
மிகச் சிறந்த உத்தியாக சுய பகடியையும், எள்ளலையும்
கைக்கொண்டுள்ளமையைக் காணலாம். அதனையே சாத்திரியின்
புனைவுகளும் சுவீகரித்துள்ளன எனலாம்.
நமது சமூகங்களில் காலங்காலமாகக் கட்டமைத்துப் பாதுகாக்கப்பட்டு வரும் போலித்தனமான வெற்றுப் புனிதங்களைக் கட்டுடைக்கும் எழுத்தியக்கமாக சாத்திரியின் இந்தச் சிறுகதைத் தொகுதியினை அடையாளப்படுத்தலாம்.
– லறீனா அப்துல் ஹக்
| Book Type | Soft Cover |
|---|---|
| Category | |
| Tags |
Reviews
There are no reviews yet.