Description
இந்த புனைவு, மொழி குறித்த பிந்தியகால சிந்தனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மொழியினால் நீடித்து நிலைத்த அர்த்தங்களை உருவாக்க முடியாது எனும் திசையில் இருந்து முன்வைக்கப்படும் பரிசோதனை உத்திகளினால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
விபர களஞ்சியம் (encyclopedia), தோற்றநிலை மெய்ம்மை (virtual reality), இரட்டை குறியீடு (double coded form), வடிவ சிதைப்பு (ruinated diagram), நேரற்ற நேர்த்தன்மை (non leaner leaner) போன்ற பல்வேறு புனைவு உத்திகள் மூலம் பின்னப்பட்ட கதை.
கதைக்குள் கதை விமர்சிக்கப்படும் புதுவகை அணுகுமுறையினால் ஒரு புனைவு தன்னையே deconstruct செய்து கொள்ளும் கதை திட்டம் இதன் சிறப்பம்சமாகும்.
மேலும், வரலாறு என்பது எப்போதும் அதிகாரம் கொண்டவர்களால் கட்டமைக்கப்படுவதாகும். வரலாறுகளுக்குள் எண்ணற்ற அதிகாரமற்ற தன்னிலைகளின் வாழ்வு குறித்து எதுவும் பேசப்படுவதில்லை. எனவே வரலாறுகளின் அதிகார கதையாடல்களை ஸ்தம்பிக்க செய்வதானால் அதன் எதிர் நிலையில் இருந்து மாற்று வரலாறுகள் கட்டமைக்கப்படுவது அவசியம் என்பதை பரிசோதிக்கும் புனைவு இதுவாகும்.
இது தமிழ் புனைவு களத்தில் முற்றிலும் புதிதான வாசிப்பு அனுபவத்தினை உருவாக்கும் பிரதியுமாகும்.
சப்றி





Reviews
There are no reviews yet.