வெள்ளாவி விமர்சனம் – By தீரன் நெளஸாத்

விமலின் வெள்ளாவி நாவலை முழுமையாகப் படித்து முடித்த போது வண்ணார்களின் மத்தியில் நான் இரண்டாவது தரம் வாழ்ந்தேன்..

என் சின்ன வயதில் நான் சலவைத் தொழிலாளர் மத்தியில் நன்றாகப் புழங்கியிருக்கிறேன்.. சாய்ந்தமருது தமிழ் குறிச்சியில் எங்கள் அல்அசல் முழுக்க வண்ணார் இனத்தவரே குடியிருந்தனர்…

அக்காலத்தில் என்னோடு வண்ணாரப்பெரியான்-மலர்- மாலையன்..வண்டு-பாக்கியராசா- ஊதிப் பார்க்கும் காத்தான்….தம்பிராசா…பார்வதி…..இன்னும்பல நண்பர்கள்…அவர்களின் வேலிகள் இல்லாத குடிசைகள்…முற்றத்தில் துணி மலைகள்…வட்ட வட்டமாக ஆதிசேடன் பாம்பு போல வெள்ளாவிக் கும்பங்கள்…அழுக்கு மூட்டைகள்..மினுக்கும் மேசை.. குறி வைக்கும் மைக்கீசா …. வளவுகள் ஊடே நடந்தால் அவர்களின் நாகதம்பிரான் கோவில்..

கொஞ்சம் பக்கத்தில் பட்டிப்பளை ஆறு..கரை முழுவதும் பாரிய வெளுக்கும் கற்கள்…அதிகாலையிலேயே ஷ்ஹ்சப்பாஹ்.. ஷ்ஹ்சப்பாஹ்…என்று துணி வெளுக்கும் தொழிலாளரின் ஒலிகள்….இவர்களின் சடங்குகள்,,சம்பிரதாயங்கள்…

எல்லாம் மறுபடி என் கண்முன்னே…இந்த வெள்ளாவி நாவலில்……ஆ…என்ன ஒரு அபூர்வ மனிதர்கள்… .ஒரு சராசரியான ‘’கதை’’க்குரிய அம்சங்களை முற்றாகப் புறம்தள்ளி நிகழ்வுகளின் யதார்த்தப் பெறுமானத்தை நாவலில் வீழ்படிவாகக் காட்டியுள்ளார் விமல் குழந்தைவேலு..

ஒரு குறிப்பிட்ட இனக் குழுமம் பற்றிய புனைவை அக்குழுமத்தின் பேச்சு மொழியில் புதினம் நெடுகவும் சொல்லிச் செல்வது எத்துணை கடின பணி…அதை மிக அவதானத்துடனும் சற்றும் பிசகின்றியும் இலாவகமாகவும் கையாண்டுள்ள விமலின் ‘’மொழிஆற்றல்’’ நம்மை மலைக்க வைக்கிறது…

Leave a Comment