December 9, 2021

அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில்/தீவுக்காலை வண்ணார் சமூக மக்களைப்பேசும் இந்நாவல் முழுக்க முழுக்க அம்மக்களுக்கேயுரிய பேச்சு மொழியிலேயே அமைந்திருக்கிறது. படித்தவுடன் சில சொற்கள் புரியாவிடினும் கதையின் ஓட்டத்தில் அவற்றின் பொருள் புரியும்படியாகவே அமைந்திருந்தமை சிறப்பு. கதையின் நாயகியாக வரும் பரஞ்சோதி ஒரு வண்ணார் சமூகப்பெண்ணாக இருக்கிறாள். அவளைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள இந்நாவலில் சமூகத்தின் விளிம்பு நிலை வண்ணார் சமூக மக்களை, அவர்களது வாழ்வியலை, உளவியற் துன்பங்களை, அச்சமூக பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை, சமூக அநீதியை எதிர்த்து நிற்க…

December 9, 2021

ஒரு குறிப்பிட்ட இனக் குழுமம் பற்றிய புனைவை அக்குழுமத்தின் பேச்சு மொழியில் புதினம் நெடுகவும் சொல்லிச் செல்வது எத்துணை கடின பணி…அதை மிக அவதானத்துடனும் சற்றும் பிசகின்றியும் இலாவகமாகவும் கையாண்டுள்ள விமலின் ‘’மொழிஆற்றல்’’ நம்மை மலைக்க வைக்கிறது…

November 29, 2021

ஆயுள் முழுதும் தூமை வெளுத்து, நோய்நொடிப்பட்டு சிகிச்சைக்குப் பணமில்லாது மாண்டு போகும், அவலம் நிறைந்த வாழ்வை வாழும் மக்களின் வாழ்வியல் மிக நேர்த்தியாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது.

July 31, 2021

முழுக் கதையையும் வட்டாரமொழிச் சொல்லில் எழுதி முடிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அந்தப் புதினத்தையும் நிகழ்திக் காட்டியிருக்கிறார் விமல் குழந்தைவேல் அண்ணா. ஆரம்ப பக்கங்களில் அதை உள்வாங்கிக்கொள்வது எனக்கு கடினமாய் இருந்தாலும் வெள்ளாவியை வாசித்துவிட்டு இடையிடையே எழுத்துசெல்லும் வேலையில் அதே பாஷைகள், அதே சொல்லடுக்குகள் எனக்குள் எழுந்துபோகாமல் இல்லை.