Description
கற்பித்தலில் ஆசிரியர்களின் அசிரத்தையும் சின்னச் சின்ன கவனயீனமும் பாரபட்சமும் நாம் நினைக்காத தாக்கத்தை செலுத்திவிடுகிறது. ஆயிஷா கதையை வாசித்த பல ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தலின் போக்கையும் மாணவர்கள் மீதான கரிசன நிலைப்பாட்டிலிருந்தும் மேம்பட்டுள்ளனர். சிரியர் தொழிலின் மேன்மையை பலர் உணரத் தொடங்கியதும் இக்கதையின் பின்னர் என்பதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆயிஷா என்றென்றும் மனதைவிட்டு அகலாதவளாக மாறிவிடுகிறாள்.
இரா. நடராசனின் ஆயிஷா கதை பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிருக்கிறது. அதனை இலங்கையில் கஸல் பதிப்பகம் ஊடாக பதிப்பிப்பதற்கு அனுமதி வழங்கிய இரா. நடராசன் அவர்களுக்கு பெரும் நன்றிகள். அவரது ஏனைய படைப்புக்களையும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் சாத்தியப்படுத்துவதற்கு ஆதரவு வழங்கும் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசனுக்கு மீளவும் நன்றிகள். மேலும் பாரதி சிராஜ் அத்துடன் வடிவமைப்பாளர் ஜீவமணிக்கும் என்றென்றும் கஸல் சார்பாக நன்றிகளும் அன்பும். இறுதியாக ஒவ்வொரு ஆசிரியர் வீட்டிலும் இருக்க வேண்டியது ஆயிஷா சிறுகதையும் ஆயிஷாவின் நினைவுகளும்.



Reviews
There are no reviews yet.